வியட்நாமின் வெளியுறவு அமைச்சகம் ஆனது, டோன்கின் வளைகுடாவில், சீனாவுடன் கடல் சார் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்ற அதன் அடிப்படை உரிமைக் கோரலை வரையறுக்கும் வரைபடத்தினை வெளியிட்டுள்ளது.
இது பிராந்திய நீர்நிலைகள் மற்றும் பிரத்தியேக பொருளாதார மண்டலங்களுக்கான வரம்புகளை தீர்மானிக்க அடிப்படை எல்லைக் கோடுகள் பயன்படுத்தப்படுகின்றது.
தென் சீனக் கடலில், சீனா, வியட்நாம் மற்றும் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகள் சில முரண்பட்ட உரிமைக் கோரல்களைக் கொண்டுள்ளன.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், இந்த டோன்கின் வளைகுடாவில் சீனா அதன் அடிப்படை எல்லையினை அறிவித்தது.