TNPSC Thervupettagam

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிசிசிஐ

April 30 , 2018 2404 days 700 0
  • மத்திய சட்ட ஆணையம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தையும் அதனோடு தொடர்புடைய மற்ற கிரிக்கெட் அமைப்புகளையும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வர பரிந்துரைத்துள்ளது.
  • ஓய்வுபெற்ற நீதிபதிS. சௌஹான் தலைமையிலான குழு, பிசிசிஐ (BCCI) அரசுக்கு இணையான அதிகாரங்களை செயல்படுத்துவதால் பங்குதாரர்களுக்குஅரசியலமைப்பின் மூன்றாம் பிரிவில் உறுதியளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள்பாதிக்கப்படுவதாக கூறியுள்ளது.
  • மேலும் இந்த ஆணையம் அரசுகளிடமிருந்து கணிசமான நிதியுதவிகளையும் பெறுவதால் பிசிசிஐ ஒரு பொது அமைப்பு என்ற விளக்கத்தின் கீழ் வருவதாகவும் கூறியுள்ளது.
  • 2007-2008 ஆண்டுகளில் இருந்து, 1961-வருமான வரிச் சட்டத்தின் பகுதி 12-A வின் கீழான பிசிசிஐ அமைப்பின் பதிவு ஒரு அறக்கட்டளை என்ற நிலைமை திரும்பப் பெறப்பட்டது.
  • ஆக, பிசிசிஐ அரசின் ஒரு கருவி அல்லது முகமை என்று பார்க்கப்பட வேண்டும். என சட்ட ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்டது.
  • சட்ட ஆணையம், பிசிசிஐ அரசியலமைப்பு விதி 12-ன் கீழ் அரசு என்ற பொருளில் கொண்டு வரப்பட வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்