மும்பை உயர்நீதிமன்றம் ஆனது திருத்தப்பட்ட 2023 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிகளை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது.
சமூக ஊடகங்களில் பரவும் அரசாங்கம் மற்றும் அதன் ஸ்தாபனங்கள் பற்றிய போலியான, தவறான மற்றும் தேவையற்றத் தகவல்களைக் கண்டறிய, தகவல்களின் உண்மைத் தன்மையின் சரிபார்ப்புப் பிரிவை (FCU) அமைக்க இந்தத் திருத்தம் மத்திய அரசிற்கு வழி வகுத்தது.
நீதிமன்றத்தின்படி, இந்தத் திருத்த விதிகள், 2023 ஆனது, “அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 14 (சமத்துவத்திற்கான உரிமை), 19 (பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம்) மற்றும் 19(1)(g) (சுதந்திரம் மற்றும் தொழில் உரிமை) ஆகியவற்றை மீறுவதாக உள்ளது.