TNPSC Thervupettagam

தகவல் ஆணையப் பரிந்துரைகள்

March 17 , 2019 1952 days 621 0
  • மத்திய அரசாலும் சில மாநில அரசுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட செயல்முறையைப் போல RTI விண்ணப்பங்களை ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான அமைப்புகளை கட்டாயமாக அமல்படுத்த வேண்டுமென தமிழக அரசிற்கு மாநில தகவல் ஆணையமானது பரிந்துரைத்துள்ளது.
  • மாநில தகவல் ஆணையமானது இரண்டாம் நிலையில் உள்ள ஒரு முறையீட்டு ஆணையமாகும். மேலும் இது ஒரு பகுதியளவில் நீதித் துறையைச் சார்ந்த அமைப்பாகும்
  • இது விண்ணப்பதாரர் மற்றும் அரசின் துறைகளுக்கிடையேயான RTI தொடர்பான விவகாரங்களுக்கு தீர்ப்பளிக்கின்றது.
  • RTI சட்டத்தின்படி மாநில தகவல் ஆணையத்திற்கு அரசிடம் பரிந்துரையளிக்கும் அதிகாரம் உண்டு என்ற போதிலும் அது அரசைக் கட்டுப்படுத்தாது.
  • RTI சட்டத்தின் பிரிவு 4(1)(b)-ன் கீழ் அதன் வலைதளத்தில் தகவல்களை நிகழ்நிலைப்படுத்த ஒவ்வொரு துறையிலும் ஒரு அனுமதியளிப்பு அதிகாரியை நியமிக்கவும் இது பரிந்துரை செய்துள்ளது.
  • மேலும் இது மாணவர்கள் தங்களது விடைத் தாள்களை பெறுவதற்கான அடிப்படை உரிமையானது RTI குறிப்புரையின் கீழ் உள்ளது எனவும் கூறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்