TNPSC Thervupettagam

தகவல் தொழில்நுட்ப இறக்குமதி மீதான சுங்க வரி விதிப்பு குறித்த சர்ச்சை

April 21 , 2023 455 days 211 0
  • சில தகவல் மற்றும் தகவல்தொடர்பு தொழில்நுட்பப் பொருட்கள் மீது அதிக இறக்குமதி வரிகளை விதிப்பதன் மூலம் இந்தியா வர்த்தக விதிகளை மீறியதாக உலக வர்த்தக அமைப்பு தீர்ப்பளித்தது.
  • ஜெனீவாவில் அமைந்துள்ள இந்த பலதரப்பு அமைப்பின் தீர்ப்பினை எதிர்த்து இந்தியா மேல்முறையீடு செய்ய உள்ளது.
  • 2017 ஆம் ஆண்டில் கைபேசிகள் மற்றும் வேறு சில தொழில்நுட்பப் பொருட்கள் மீது 10 சதவீதச் சுங்க வரியை இந்தியா விதித்தது தொடர்பான ஒரு சர்ச்சையை உலக வர்த்தக அமைப்பு விசாரித்து வந்தது.
  • இந்தியா பின்னர் சுங்க வரியை 10 முதல் 20 சதவீதமாக உயர்த்திய நிலையில், இது அமெரிக்கா, சீனா, தைவான், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுடனான வர்த்தகத்தினை நிலை குலைத்தது.
  • இந்தியா இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்காகவும், உள்நாட்டுத் தொழில்நுட்பப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காகவும் 2017 ஆம் ஆண்டு முடிவு மேற் கொள்ளப்பட்டதாக வாதிட்டு வருகிறது.
  • மேலும், இந்தத் தொழில்நுட்பத் தயாரிப்புகள் 1996 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இல்லை என்று கூறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்