TNPSC Thervupettagam

தகவல் தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட காவல் துறை ஆளுகை

October 20 , 2019 1919 days 725 0
  • தமிழ்நாடு காவல்துறை தலைமையகமானது காகிதத்தைப் பயன்படுத்தாமல் பணியாற்றும் மாநில அரசாங்கத்தின் முதலாவது பெரிய அமைப்பாக உருவெடுத்துள்ளது.
  • ‘தலைமை அலுவலகம்’ என்றும் அழைக்கப்படும் காவல்துறைப் பொது இயக்குநர் அலுவலகத்தில் உள்ள முழு நிர்வாகமும் தானியங்கி முறையில் செயல்படுத்தப் பட்டுள்ளது.
  • காவல்துறைப் பொது இயக்குனர் அலுவலகம் தவிர, மூன்று ஆணையர் அலுவலகங்கள் மற்றும் 15 மாவட்டங்கள் முழுமையாக தானியங்கி முறையில் மாற்றப் பட்டுள்ளன.

இ – அலுவலகம் (மின்னணு முறையிலான அலுவலகம்)

  • காவல் துறையானது தேசிய தகவல் மையத்தால் உருவாக்கப்பட்ட இணையச் செயலியான இ – அலுவலகம் என்ற செயலியைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.
  • மின்னணு முறையிலான அலுவலகம் என்பது ஒரு பாதுகாப்பான அமைப்பாகும்.  இது கோப்புகளை அடுத்த நிலைக்கு விரைவாகக் கொண்டுச் செல்ல வசதியளிப்பதோடு மட்டுமல்லாமல் பின்வருவனவற்றிற்கும் வழி வகுக்கின்றது.
    • சிறந்த நிர்வாகத்திற்கு வழிவகுக்கும் வகையில் மனித வளத்தை மேலும் நியாயமான முறையில் பயன்படுத்துவது
    • வெளிப்படைத் தன்மை

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்