- தமிழ்நாடு காவல்துறை தலைமையகமானது காகிதத்தைப் பயன்படுத்தாமல் பணியாற்றும் மாநில அரசாங்கத்தின் முதலாவது பெரிய அமைப்பாக உருவெடுத்துள்ளது.
- ‘தலைமை அலுவலகம்’ என்றும் அழைக்கப்படும் காவல்துறைப் பொது இயக்குநர் அலுவலகத்தில் உள்ள முழு நிர்வாகமும் தானியங்கி முறையில் செயல்படுத்தப் பட்டுள்ளது.
- காவல்துறைப் பொது இயக்குனர் அலுவலகம் தவிர, மூன்று ஆணையர் அலுவலகங்கள் மற்றும் 15 மாவட்டங்கள் முழுமையாக தானியங்கி முறையில் மாற்றப் பட்டுள்ளன.
இ – அலுவலகம் (மின்னணு முறையிலான அலுவலகம்)
- காவல் துறையானது தேசிய தகவல் மையத்தால் உருவாக்கப்பட்ட இணையச் செயலியான இ – அலுவலகம் என்ற செயலியைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.
- மின்னணு முறையிலான அலுவலகம் என்பது ஒரு பாதுகாப்பான அமைப்பாகும். இது கோப்புகளை அடுத்த நிலைக்கு விரைவாகக் கொண்டுச் செல்ல வசதியளிப்பதோடு மட்டுமல்லாமல் பின்வருவனவற்றிற்கும் வழி வகுக்கின்றது.
- சிறந்த நிர்வாகத்திற்கு வழிவகுக்கும் வகையில் மனித வளத்தை மேலும் நியாயமான முறையில் பயன்படுத்துவது
- வெளிப்படைத் தன்மை