இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமானது மேற்பார்வையிடுதலில் குறைபாட்டுடன் செயல்பட்டமைக்காக ரூ.1000 கோடியை அபராதத் தொகையாக 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று தேசியப் பங்கு பரிவர்த்தனை அமைப்பிற்கு (NSE - National Stock Exchange of India) உத்தரவிட்டுள்ளது.
NSE தகவல் மைய வசதியின் கீழ், இடைத் தரகர்கள் தங்களது தகவல் சேவையகத்தை (Server) பரிவர்த்தனை தகவல் மையத்தில் வைத்துக் கொள்ளலாம்.
ஆனால் பரிவர்த்தனை தகவல் சேவையகத்தை அணுகுவதற்கு சில இடைத் தரகர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
இந்த நியாயமற்ற நடைமுறையின் காரணமாக ஆயிரம் கோடிக்கு மேல் அவர்கள் இலாபம் அடைந்துள்ளனர்.