TNPSC Thervupettagam

தகவல்தொடர்பு செயற்கைக் கோள் – “சீனாசாட் 6C”

March 10 , 2019 1960 days 543 0
  • தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள சிசங் செயற்கைக்கோள் செலுத்து மையத்திலிருந்து புவி சுற்றுவட்டப்பாதைக்கு ஒரு புதிய தகவல்தொடர்பு செயற்கைக்கோளை சீனா செலுத்தியுள்ளது.
  • இந்த செயற்கைக்கோளிற்கு “சீனாசாட் 6C” என்று பெயரிடப்பட்டுள்ளது. இது லாங் மார்ச் – 3B ஏவு வாகனத்தின் மூலம் செலுத்தப்பட்டது.
  • இது உயர்தர வானொலி மற்றும் தொலைக்காட்சி பரப்புகை சேவைகளை அளிக்கும்.
  • இதன் சேவை சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் பசிபிக் தீவுகளைச் சேர்ந்த நாடுகளை சென்றடைய முடியும்.
  • சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தினால் வடிவமைக்கப்பட்ட லாங் மார்ச் செலுத்து வாகன வரிசையில் 300-வது திட்டத்தை இந்த சீனாசாட் 6C குறிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்