April 10 , 2023
597 days
272
- திரவங்களில் தகைவுமின் விளைவு இருப்பதற்கான ஆதாரங்களை அறிவியலாளர்கள் முதன்முறையாகக் கண்டறிந்துள்ளனர்.
- இந்த விளைவானது கடந்த 143 ஆண்டுகளாக நன்கு அறியப்பட்ட ஒன்றாக இருந்தது ஆனாலும் அது திடப் பொருட்களில் மட்டுமே காணப்படுவதாக அறியப்பட்டது.
- இந்த விளைவானது,
- தூய 1-பியூட்டைல்-3-மெத்தில் இமிடாசோலியம் பிஸ் (ட்ரைஃப்ளூரோமெத்தில்-சல்போனைல்) இமைட் மற்றும்
- 1-ஹெக்சைல்-3-மெத்தில் இமிடாசோலியம் பிஸ் (ட்ரைஃப்ளூரோமெதில் சல்போனைல்) இமைடு ஆகியவற்றில் கண்டறியப் பட்டது.
- இந்த இரண்டும் அறை வெப்பநிலையில் அயனித் திரவங்கள் (மூலக்கூறுகளுக்குப் பதிலாக அயனிகளால் ஆன திரவங்கள்) ஆக உள்ளன.
- தகைவுமின் விளைவில், ஒரு அமைப்பானது அழுத்தத்திற்கு உட்படுத்தப்படும் போது மின்சாரம் உருவாகிறது.
- குவார்ட்ஸ் ஆனது நன்கு அறியப்பட்ட தகைவுமின் படிகமாகும்.
Post Views:
272