TNPSC Thervupettagam

தங்க இறக்குமதி குறைவு

March 18 , 2020 1716 days 573 0
  • ஏப்ரல் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை (2019 - 20) தங்கத்தின்  இறக்குமதியானது முந்தைய ஆண்டை விட 8.86% அளவிற்கு குறைந்துள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • உலகிலேயே அதிக அளவு தங்கம் இறக்குமதி செய்யும் நாடு இந்தியா ஆகும்.
  • தங்கம் மற்றும் எரிபொருள் இறக்குமதி காரணமாக இந்தியப் பொருளாதாரமானது அதிகரித்து வரும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது.
  • நடப்புக் கணக்குப் பற்றாக்குறை என்பது ஏற்றுமதியின் மூலம் பெறப்படும் பணத்திற்கும் இறக்குமதியின் மூலம் வெளியேறும் பணத்திற்கும் உள்ள வித்தியாசமாகும்.
  • அதிகரித்து வரும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை கொண்ட நாடு என்பது அந்த நாடு போட்டிச் சந்தையிலிருந்து வெளியேறுகின்றது என்பதைக் குறிக்கின்றது.
  • முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தயாராக இல்லை என்பது இதன் பொருளாகும்.
  • எனவே, தங்கம் மற்றும் எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் நடவடிக்கையானது நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்