அமெரிக்காவில் நிரந்தர வசிப்பிடத்தினை நாடும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு "தங்க நிற அட்டை" என்ற நுழைவு இசைவுத் திட்டத்தினை அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
தங்க நிற அட்டையின் மதிப்பு சுமார் 5 மில்லியன் டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது பச்சை நிற அட்டையின் சலுகைகளையும் வழங்குகிறது என்பதோடு (அமெரிக்க) குடியுரிமை பெறுவதற்கான பாதையாகவும் உள்ளது.
1990 ஆம் ஆண்டு காங்கிரஸால் உருவாக்கப்பட்ட EB-5 திட்டம் ஆனது, அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவைகள் (USCIS) என்ற அமைப்பினால் நிர்வகிக்கப் படுகிறது.
இது அமெரிக்க நாட்டு வணிகங்களில் முதலீடு செய்யும் வெளிநாட்டினருக்கு நிரந்தர வசிப்பிட (பச்சை நிற அட்டை) வாய்ப்பினை வழங்குகிறது.
இதில் முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 1.05 மில்லியன் டாலர் (சில குறிப்பிட்ட சூழலில் 800,000 டாலர்) முதலீடு செய்ய வேண்டும் என்பதோடு அமெரிக்கர்களுக்கு குறைந்தது 10 வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும்.