நான்கு இந்திய நிறுவனங்களைச் சேர்ந்த அறிவியலாளர்கள் மேற்கொண்ட கூட்டுப் பரிசோதனையின் விளைவாக கார்டி தங்க நுண்துகள்கள் (Cor-AuNPs) கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
இது ஜெர்மனியிடமிருந்து சர்வதேசக் காப்புரிமையைப் பெற்றுள்ளது.
இந்த நுண்துகள்கள், கார்டிசெப்ஸ் மிலிடாரிஸ் மற்றும் தங்க ரக உப்புகளின் படிமங்களில் இருந்து பெறப் பட்டவையாகும்.
இது மனித உடலில் மருந்தின் பரவலை வேகமாகவும் உறுதியாகவும் பரவச் செய்யும்.
கார்டிசெப்ஸ் மிலிடாரிஸ் என்பது ஆய்வகத்தில் வளர்க்கப்படும் அதிக மதிப்புள்ள ஒட்டுண்ணி வகை பூஞ்சை ஆகும்.
அபரிமிதமான மருத்துவ குணங்கள் கொண்டு இருப்பதால் இது சூப்பர் காளான் என்று அழைக்கப் படுகிறது.