டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலின் இரும்புக் கவச எறிகணை பாதுகாப்பு அமைப்பினைப் போன்ற ஒரு 'தங்கக் கவச' அமைப்பினைக் கட்டமைக்க உள்ளதாக கூறியுள்ளார்.
இந்தக் கவசம் ஆனது, அதிமீயொலி எறிகணைகள் போன்ற அதன் சார்பு மற்றும் அந்த நுட்பத்தினை ஒத்த எறிகணைகள் உள்ளிட்ட மிகப் பரந்த அளவிலான எதிரி நாட்டு எறிகணை அச்சுறுத்தல்களிலிருந்து எதிராக பாதுகாப்பினை வழங்கும்.
அதிமீயொலி மற்றும் உந்துவிசை எறிகணைகள் உள்ளிட்ட சில மேம்பட்ட எறிகணை அச்சுறுத்தல்களிலிருந்து முழு அமெரிக்கப் பிரதேசத்தையும் இது பாதுகாக்கும்.