இந்தத் தங்கக் குவியலானது உத்திரமேரூருக்கு அருகில் உள்ள குழம்பேஸ்வரர் ஆலயத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இந்தக் கோயிலானது 11 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த இரண்டாம் குலோத்துங்க சோழன் காலக் கட்டத்தைச் சேர்ந்தது என்று நம்பப்படுகின்றது.
உத்திரமேரூர் ஆனது தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு இடமாகும்.
உத்திரமேரூரில் முதலாம் பராந்தக சோழன் (907-950), முதலாம் இராஜராஜ சோழன் (985-1014), முதலாம் இராஜேந்திர சோழன் (1012-1044,) மற்றும் முதலாம் குலோத்துங்கச் சோழன் (1070-1120) ஆகியோரது காலகட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளும் உள்ளன.
உத்திரமேரூரில் உள்ள கோவில் கல்வெட்டுகள் ஊரகத் தன்னாட்சி குறித்து அவர்களது வரலாறு சார்ந்த நிகழ்வுகளை விவரிக்கும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.