மார்ச் 26 ஆம் தேதி முதல் தங்கத்தைப் பணமாக்குதல் திட்டத்தின் கீழ் நடுத்தர கால மற்றும் நீண்ட கால வைப்பு வசதியினை மத்திய அரசு நிறுத்தியுள்ளது.
கணக்கில் பயனின்றி இருக்கும் தங்கத்தைப் பயன் மிக்கதாக மாற்றுவதற்காக 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தங்கத்தைப் பணமாக்குதல் திட்டம் தொடங்கப் பட்டது.
இது நுகர்வோர் தங்கள் தங்கத்தை விற்கவோ அல்லது வங்கிகளில் சேமிக்கவோ வழி வகை செய்தது என்பதோடு இது நடைமுறை / முறைசார் பொருளாதாரத்தில் ஒன்று இணைந்து நாட்டின் தங்க இறக்குமதியைக் குறைக்க உதவும்.
GMS என்பது பழைய தங்க வைப்புத் திட்டத்தின் புதுப்பிக்கப்பட்ட வடிவமாகும்.
இது மூன்று கூறுகளைக் கொண்டிருந்தது:
குறுகிய கால வங்கி வைப்பு (1-3 ஆண்டுகள்);
நடுத்தர கால அரசு வைப்பு (5-7 ஆண்டுகள்); மற்றும்
நீண்ட கால அரசு வைப்பு (12-15 ஆண்டுகள்).
இதில் அனுமதிக்கப்பட்ட குறைந்த பட்ச வைப்பு வரம்பு 10 கிராம் தங்கம் (கட்டிகள், நாணயங்கள், கற்கள் மற்றும் பிற உலோகங்கள் தவிர நகைகள்).
இந்தத் திட்டத்தின் கீழ் வைக்கப்படும் வைப்புத் தொகைக்கு அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை.