TNPSC Thervupettagam

தங்கர் சமூகத்தினரின் மேய்ச்சல் இடங்களுக்கான கோரிக்கை

August 31 , 2024 44 days 58 0
  • தங்கர் சமூகத்தினர் மகாராஷ்டிராவில் உள்ள ஆயர் மற்றும் நாடோடி பழங்குடியினக் குழுவாகும்.
  • செம்மறி ஆடுகளை மேய்ப்பதற்கான இடங்கள் குறைந்து வருவதால் வழக்கமான மேய்ச்சல் நிலங்களை மீட்பதற்கான முயற்சிகளை அவர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
  • இவர்கள் புலம்பெயரும் வகையிலான மேய்ச்சல் நடைமுறைகளுக்குப் பெரும் புகழ் பெற்றவர்கள் என்பதோடு, அவர்கள் தங்களின் கால்நடைகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காக வேண்டி வழக்கமாக பரந்த தொலைவுகளை நோக்கிப் பயணிக்கின்றனர்.
  • 1996 ஆம் ஆண்டில், அந்த மாநில அரசானது தியானங்கங்கா என்ற வனவிலங்குச் சரணாலயத்தினை அறிவித்த பிறகு அவர்கள் தங்களின் மேய்ச்சல் நிலத்தின் பெரும் பகுதியினை இழந்தனர்.
  • இந்தச் சமூகத்தினர் 2006 ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின் கீழ் வரையறுக்கப் பட்ட மேய்ச்சல் பகுதிகளை கோருகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்