TNPSC Thervupettagam

தங்குமிடத் திட்டத்தின் நீட்டிப்பு

November 5 , 2017 2606 days 1007 0
  • சாகர் மாலா பெருந்திட்டத்தின் கீழ் உள்ள கடலோரத் தங்குமிடத் திட்டத்தினை மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சகமானது மேலும் மூன்று வருடங்களுக்கு நீடித்துள்ளது.
  • இந்த கடலோரத் தங்குமிடத் திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் 8 மாநிலங்களில் மேற்கொள்ளப்படும். இதன்படி கோவா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான உள்கட்டமைப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடலோரத் தங்குமிடத் திட்டம் (Coastal Berth Scheme)
  • தேசிய நீர்வழிப் பாதைகளுக்கும் , பயணிகள் மற்றும் சரக்குகளின் கடல்வழி போக்குவரத்திற்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உண்டாக்க துறைமுகங்கள் அல்லது மாநில அரசாங்கங்களுக்கு நிதி ஆதரவுகளை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • இத்திட்டங்களுக்கான மொத்த செலவில் 50% மத்திய அரசின் நிதி உதவியாக அளிக்கப்படும்.
  • மீதச் செலவுத் தொகை சம்பந்தப்பட்ட துறைமுகங்கள், மாநில அரசாங்கங்களின் நிதி மூலங்களிலிருந்து பெறப்படும்.
  • கடலோர கப்பல் போக்குவரத்தை மேம்படுத்துவதும், இந்தியாவில் உள்நாட்டு சரக்கு போக்குவரத்தில் துறைமுகங்களின் பங்கினை அதிகரிப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
சாகர் மாலா
  • இந்தியாவின் கடலோரங்களில் அமைந்துள்ள அனைத்து துறைமுகங்களையும் மேம்படுத்துவதே சாகர் மாலா திட்டத்தின் நோக்கமாகும்.
  • இந்தியாவின் 7500 கி.மீ. நீளமுள்ள கடலோரப் பகுதிகளில், துறைமுகங்கள் மூலமான வளர்ச்சியை ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
  • துறைமுகங்களை நவீனப்படுத்துதல், திறம் வாய்ந்த சரக்கு வெளியேற்ற அமைப்பு, கடலோரப் பொருளாதார மேம்பாடு ஆகிய மூன்றும் இந்தப் பெரும் சாகர் மாலாத் திட்டத்தின் முக்கிய மூன்று கூறுகளாகும்.
  • மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் இத்திட்டத்தின் முதன்மை பொறுப்புடைய அமைச்சகம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்