உலக ஊக்கமருந்துப் பயன்பாட்டு எதிர்ப்பு முகமை (WADA) ஆனது டெல்லியில் உள்ள தேசிய ஊக்கமருந்து சோதனை ஆய்வகத்திற்கு (NDTL) தடகள வீரர்களின் கடவுச்சீட்டு மேலாண்மை அலகினை (APMU) நிறுவுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
விளையாட்டுத் துறையில் நியாயத் தன்மையினை உறுதி செய்யும் நோக்கத்துடன் விளையாட்டு வீரர்களின் உயிரியல்/ உடலியல் சார்ந்த விவரங்களை NDTL நிர்வகிக்க உள்ளது.
தடகள வீரர்களின் உடலியல் தகுதி சார் கடவுச் சீட்டு (ABP) என்பது பல ஆண்டுகளாக விளையாட்டு வீரரின் உயிரியல் குறி காட்டிகளைக் கண்காணிக்கின்ற ஒரு மேம்பட்ட ஊக்கமருந்துப் பயன்பாட்டு எதிர்ப்பு கருவியாகும்.
இரத்தம் மற்றும் ஊக்கமருந்து குறித்த விவரங்கள் போன்ற அளவுருக்களில் உள்ள சில மாறுபாடுகளை நன்கு பகுப்பாய்வு செய்வதன் மூலம், விளையாட்டுகளில் நியாயத் தன்மையினை உறுதிப்படுத்தவும், எந்தவித ஊக்கமருந்து பயன்பாடும் இல்லாத ஒரு வகையில் விளையாட்டு வீரர்களைப் பாதுகாக்கவும் ABP உதவுகிறது.
2022 ஆம் ஆண்டில், மிக அதிக சதவீத ஊக்கமருந்து பயன்பாட்டுக் குற்றவாளிகளைக் கொண்ட நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
ரஷ்யா (85), அமெரிக்கா (84), இத்தாலி (73) மற்றும் பிரான்சு (72) போன்ற சில முக்கிய நாடுகளை விட இந்தியாவின் ஊக்கமருந்து பயன்பாட்டு மீறல்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.