இந்த வசதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்து, மாநிலக் காவல்துறைத் தலைவரிடம் ஒப்படைத்தார்.
தமிழ்நாடு தனது சொந்த ‘தடயவியல் டிஎன்ஏ விவரத் தேடல் கருவி’ என்ற கருவியை நாட்டிலேயேப் பெற்ற முதல் மாநிலமாக மாறியுள்ளது.
இது மாநிலத் தடய அறிவியல் துறையால் உருவாக்கப்பட்டது.
மனிதக் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களின் சுயவிவரங்களை சேகரிக்க; காணாமல் போன குழந்தைகளை அடையாளம் காண; பிற மாநிலங்களைச் சேர்ந்த குற்றவாளிகள், அடையாளம் தெரியாத உடல்கள், வரலாற்றுத் தாள்களின் விவரங்கள் மற்றும் இயற்கைப் பேரழிவுகளில் இறக்கும் நபர்களைக் கண்காணிக்க இந்தக் கருவி பயனுள்ளதாக இருக்கும்.
டிஎன்ஏ என்பது மாநிலத் தடய அறிவியல் துறையின் 14 பிரிவுகளில் ஒன்றாகும்.