இந்தியாவில் கோவாக்சின் மற்றும் ஜைகோவ்-டி ஆகிய கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைக் கொண்டு மனிதன் மீதான சோதனைகளை நடத்துவதற்கான பதிவுகளை இந்திய நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.
கோவாக்சின் தடுப்பூசி என்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் ஆகியவற்றால் இணைந்து உருவாக்கப் பட்டுள்ளது. இன்னொரு தடுப்பூசியான ஜைகோவ்-டி தடுப்பூசி ஜைடஸ் காடிலா எனும் நிறுவனத்தால் உருவாக்கப் பட்டுள்ளது.