TNPSC Thervupettagam

தடை செய்யப்பட்ட பகுதிக்கான அனுமதி தளர்த்தப்படுதல்

August 9 , 2018 2175 days 599 0
  • மத்திய உள்துறை அமைச்சகம், 2022-ஆம் ஆண்டு டிசம்பர் வரை வெளிநாட்டினர் (தடைசெய்யப்பட்ட பகுதிகள்) ஆணை, 1963 என்ற ஆணையின் கீழ் அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் உள்ள 29 ஆளில்லா தீவுகளை தடைசெய்யப்பட்ட பகுதிக்கான அனுமதி முறையிலிருந்து விலக்கியிருக்கின்றது.
  • இம்முடிவு சுற்றுலாத் துறையை ஊக்குவித்து பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த எண்ணுகின்றது.
  • ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் சீனாவைச் சேர்ந்த குடிமகன்கள் மற்றும் இந்நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட வெளிநாட்டவர்கள் அந்தமானிற்கு வருகை தரும்போது கண்டிப்பாக குறிப்பிட்ட பகுதிக்கான அனுமதியைப் பெற வேண்டும்.
  • மாயாபந்தர் மற்றும் திஜிலிப்பூர் தீவுகளுக்கு வருகை தருகையில் மியான்மரைச் சேர்ந்த குடிமக்களும் அந்த அனுமதியைப் பெற வேண்டும்.
  • இது தவிர, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் பழங்குடியினப் பகுதிகள் ஆகியவற்றைப் பார்வையிட தகுந்த அதிகாரிகளிடம் தேவைப்படும் ஒப்புதல்களைப் பெற வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்