ரூர்கியிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த அறிஞர்கள், தட்கன் எனும் கைப்பேசி செயலியை உருவாக்கியுள்ளனர். இந்த செயலியானது இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தொலை தூரத்திலிருந்து கண்காணிப்பதுடன் அவர்களுக்கு மருத்துவ ரீதியிலான உதவிகளையும் வழங்குகிறது.
நோயாளிகளின் உடல்நலத் தரவுகளில் (Health Datas) ஏதேனும் கடுமையான மாற்றங்கள் ஏற்படுமேயானால் இந்த செயலி அதனை உடனடியாக மருத்துவர் மற்றும் நோயாளிக்குத் தெரிவிக்கிறது. இந்த கடுமையான மாற்றங்களானது மாரடைப்பு உடனடியாக ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறிப்பிட்டுக் காட்டுகிறது.
இந்த கைப்பேசி செயலியானது, ரூர்கியிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் வல்லுநர்களால் மருத்துவ அறிவியலுக்கான அனைத்திந்திய நிறுவனத்தின் (AIIMS) வல்லுநர்களோடு கூட்டிணைந்து வடிவமைக்கப்பட்டது.