TNPSC Thervupettagam

தட்டைப்புழுவின் புதிய அயலக இனங்கள்

October 5 , 2024 16 hrs 0 min 32 0
  • ஒரு தட்டைப்புழுவின் புதியதொரு அயலக இனமானது அமெரிக்காவிலும் தென் அமெரிக்காவின் பல பகுதிகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.
  • அமாகா சூடோபாமா என்று பெயரிடப்பட்ட இந்த இனமானது, ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் 2020 ஆம் ஆண்டில் வட கரோலினாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இது தென் அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இனமாக கருதப்படுகிறது.
  • பின்னர் இந்தத் தட்டைப்புழு இனம் ஆனது முற்றிலும் ஒரு வேறுபட்ட இனம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
  • இந்த நிலப்பரப்பு வாழ் தட்டைப்புழுக்கள் மற்ற முதுகெலும்பில்லாத உயிரினங்களை, குறிப்பாக பிற உள்நாட்டுப் புழு இனங்கள், நத்தைகள் மற்றும் அட்டைப் பூச்சிகளைக் கொல்லும் என்று அறியப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்