TNPSC Thervupettagam

தணிக்கைத் தினம் - நவம்பர் 16

November 18 , 2021 1014 days 394 0
  • இந்த ஆண்டு முதலாவது தணிக்கைத் தினமானது  கொண்டாடப்படுகிறது.
  • இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் பதவியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உருவாக்கத்தினைக் குறிக்கும் வகையில் இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • தற்போது, ​​ஜம்மு மற்றும் காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தின் முன்னாள் துணை நிலை ஆளுநரான  ஜி.சி.முர்மு இந்தியாவின் இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் ஆகப் பணியாற்றி வருகிறார்.
  • இவர் இந்தியாவின் 14வது இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் ஆவார்.
  • அவரது பதவிக்காலம் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கியது.
  • இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் என்பது இந்தியாவின் ஒரு அரசியலமைப்பு ஆணையமாகும்.
  • இது இந்திய அரசியலமைப்பின் 148வது விதியின்படி நிறுவப்பட்டது.
  • இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கைகள் பாராளுமன்றம் அல்லது மாநிலச் சட்டமன்றங்களில் தாக்கல் செய்யப்படுகின்றன.
  • அவை பொதுக் கணக்குக் குழுக்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கான குழுக்கள்  ஆகியவற்றால் விவாதிக்கப்படுகின்றன.
  • பொதுக் கணக்குக் குழுக்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கான குழுக்கள்  என்பவை பாராளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் உள்ள சிறப்புக் குழுக்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்