இந்த அறிக்கையானது ‘உலக தண்ணீர் நெருக்கடி குறித்த என்ன, ஏன் மற்றும் எப்படி என்ற கேள்விகள்: தண்ணீர் சார்ந்த பொருளாதாரத்திற்கான உலகளாவிய ஆணையத்தின் முதல் கட்ட மறு ஆய்வு மற்றும் கண்டுபிடிப்புகள்’ என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையினை தண்ணீர் சார்ந்தப் பொருளாதாரத்திற்கான உலகளாவிய ஆணையம் (GCEW) வெளியிட்டுள்ளது.
2050 ஆம் ஆண்டில் தண்ணீர் மற்றும் வெப்பநிலை ஆகியவற்றின் நெருக்கடி காரணமாக இந்தியாவின் உணவு விநியோகத்தில் 16% குறைவு ஏற்படும்.
இந்த அறிக்கையில், உணவு வழங்கீட்டில் 22.4% குறைவுடன் சீனா முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து 19.4% குறைவுடன் தென் அமெரிக்க நாடும் இடம் பெற்றுள்ளன.
தற்போது நிகர உணவு ஏற்றுமதியாளர்களாக விளங்கும் சீனா மற்றும் ASEAN உறுப்பினர் நாடுகள் உட்பட பல ஆசிய நாடுகள் 2050 ஆம் ஆண்டிற்குள் நிகர உணவு இறக்குமதியாளர்களாக மாறும்.
இந்தியாவில் தண்ணீர் வழங்கீடு 1100-1197 பில்லியன் கன மீட்டர்கள் என்ற வரம்பிற்கு இடையே உள்ளது.
மாறாக, 2010 ஆம் ஆண்டில் 550-710 பில்லியன் கன மீட்டர்களாக இருந்த தண்ணீர் தேவையானது 2050 ஆம் ஆண்டில் 900-1,400 பில்லியன் கன மீட்டர்களாக உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
2019 ஆம் ஆண்டில் தண்ணீர் நெருக்கடியினை எதிர்கொள்ளும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 13வது இடத்தில் உள்ளது.