தண்ணீர் (மாசுபடுத்துதல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) திருத்த மசோதா, 2024
February 18 , 2024 284 days 215 0
தண்ணீர் (மாசுபடுத்துதல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) திருத்த மசோதா, 2024 ஆனது அது தொடர்பான சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்காக முன்மொழியப் பட்டு, 72 மணி நேரத்திற்குள் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டது.
50 ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறைக்கு வந்த அசல் சட்டத்தின் விதிகளை இந்தச் சட்டம் தளர்த்துகிறது.
மத்திய மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் (SPCB) ஆனது 1974 ஆம் ஆண்டு சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த சட்டத்தின் திருத்தப்பட்ட வடிவம் ஆனது தற்போது இமாச்சலப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கு பொருந்தும்.
1974 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட அசல் சட்டமானது 25 மாநிலங்களுக்குப் பொருந்தும்.
இதில் மேற்கொள்ளப்பட்டுள்ள மிக முக்கியமான மாற்றம் என்னவென்றால், "சிறிய அளவானது" எனக் கருதப் படும் பல விதி மீறல்களுக்கான சிறைத்தண்டனை விதிகளை நீக்கி, அவற்றிற்குப் பதிலாக 10,000 ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரையிலான அபராதம் ஆக மாற்றியுள்ளது.
இந்தத் திருத்தங்கள், சில சந்தர்ப்பங்களில் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களின் விதிகளை ரத்து செய்ய மத்திய அரசிற்கு அதிக அதிகாரம் அளிக்கின்றன.
SPCB அனுமதியின்றி ஒரு தொழில்துறைப் பிரிவை இயக்கினால் அல்லது நிறுவினால், அபராதத்துடன் ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.
SPCB வழங்கிய ஒப்புதலை வழங்குதல், மறுத்தல் அல்லது ரத்து செய்வதற்கான வழி காட்டுதல்களை மத்திய அரசு வெளியிடலாம் என்றும் இந்த மசோதா கூறுகிறது.
மேலும் இது எந்தவொரு தொழிற்துறை அல்லது சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க முடியுமா என்பதைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் கண்காணிப்பு சாதனங்களை சேதப்படுத்தும் குற்றத்திற்கு அபராதத்தினைத் தண்டனையாக விதிக்கிறது.