தனக்கென ஓர் தனித்த சுய அடையாளத்தை அளிப்பதற்காகவும், தன்னுடைய உலகளாவிய தோற்றத்தை முன்னிலைப்படுத்தி காட்டுவதற்கும் ஒரு சுயமான அடையாள சின்னத்தை (logo) கொண்டுள்ள முதல் இந்திய நகரமாக பெங்களூரு நகரம் உருவாகியுள்ளது.
பெங்களூருவில் கொண்டாடப்படும் “நம்ம பெங்களூரு ஹப்பா திருவிழாவில்” இச்சின்னம் வெளியிடப்பட்டது.
இதன் மூலம் தனக்கென தனியே சுயமான சுற்றுலா சின்னங்களையுடைய உலக நகரங்களான மெல்போர்ன், பெர்லின், இலண்டன், சிங்கப்பூர், பாரிஸ், நியூயார்க் மற்றும் ஆம்ஸ்டர்டேம் போன்ற மெகா சிட்டிகளின் வரிசையில் பெங்களூருவும் இணைந்துள்ளது.
“நம்மூர்“எனும் வடிவமைப்பு ஸ்டார்ட் அப் நிறுவனத்தினால் இந்த சின்னம் வடிவமைக்கப்பட்டது.
சிவப்பு மற்றும் கருப்பு நிறமுடைய இந்த சின்னத்தில் “பெங்களூரு பீ யூ“ (Bengaluru Be You) எனும் குறிச்சொற்றொடர் (Tagline) கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.