TNPSC Thervupettagam

தனிப்பட்ட ஹால்மார்க் அடையாள எண்

March 8 , 2023 631 days 394 0
  • ஏப்ரல் 01 ஆம் தேதி முதல், தனிப்பட்ட ஹால்மார்க் அடையாள எண் (HUID) இல்லாமல் தங்க நகைகள் விற்பனை செய்ய அனுமதிக்கப்படாது.
  • தங்கத்திலான ஒவ்வொரு பொருளுக்கும் இது ஒரு தனித்துவமான அடையாளங் காட்டியாக விளங்கும்.
  • இது ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளின் தூய்மையை உறுதி செய்திடுவதையும், ஏதேனும் முறைகேடுகள் நிகழ்கின்றனவா எனக் கண்காணிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஹால்மார்க் என்பது தங்க நகைகளின் அதன் நேர்த்தியையும் தூய்மையையும் உறுதி செய்வதற்காக இந்தியத் தரநிர்ணய ஆணையத்தினால் (BIS) அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தால் இடப்படுகிற ஓர் அடையாளமாகும்.
  • இதற்கு முன்னதாக, HUID நான்கு இலக்கங்களைக் கொண்டிருந்தது.
  • தற்போது இரண்டு HUID எண்களும் (4 இலக்கங்கள் மற்றும் 6 இலக்கங்கள்) சந்தையில் பயன்படுத்தப் படுகின்றன.
  • இதில் மார்ச் 31 ஆம் தேதிக்குப் பிறகு 6 இலக்க எண்ணெழுத்துக் குறியீடு மட்டுமே அனுமதிக்கப் படும்.
  • சோதனை & ஹால்மார்க் வழங்கீட்டு மையத்தில், தங்க நகைகள் மீது தனிப்பட்ட எண்கள் கைமுறையாக முத்திரையிடப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்