TNPSC Thervupettagam

தனியாரால் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் செயற்கைக்கோள்

December 9 , 2018 2050 days 548 0
  • அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள வான்டென்பெர்க் விமானப்படைத் தளத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது தனியாரால் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதலாவது செயற்கைக் கோளான எக்ஸீட்சாட் 1-ஐ (ExseedSAT 1) சமீபத்தில் விண்ணில் செலுத்தியது.
  • இந்த செயற்கைக்கோள் அந்நிறுவனத்தின் மிகப்பெரிய அளவிலான ‘ரைடுஷேர்’ (rideshare) திட்டத்தின் இருமுறை மறு உபயோகம் செய்யப்பட்ட பால்கன் 9 ராக்கெட்டில் 18 நாடுகளின் மற்ற 63 செயற்கைக்கோள்களுடன் இணைந்து செலுத்தப்பட்டது.
  • இந்த செயற்கைக்கோளானது மும்பையை அடிப்படையாகக் கொண்டு புதிதாக தொடங்கப்பட்ட எக்ஸீடுஸ்பேஸ் (Exseedspace) என்ற தொடக்க நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
  • இந்த செயற்கைக்கோளானது ஹேம் அலைவரிசைகளில் செயல்படும் திறந்த நிலை ரேடியோ டிரான்ஸ்பாண்டர் ஆகும். இந்த செயற்கைக் கோளானது 5 ஆண்டுகால ஆயுளைக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்