TNPSC Thervupettagam

தனியாரால் நிர்வகிக்கப்படும் மின்சாரப் பேருந்துகள்

October 6 , 2019 1933 days 681 0
  • தமிழ்நாட்டில் விரைவில் இயக்கப் படவிருக்கும் அனைத்து 525 மின்சாரப் பேருந்துகளும் ஒரு தனியார் ஒப்பந்ததாரரால் சொந்தமாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட இருக்கின்றது.
  • அவை மாநிலப் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படாது.
  • இனிமேல் மாநில அரசால் நேரடியான கொள்முதல் இருக்காது.
  • அதற்குப் பதிலாக ஒரு மொத்த மதிப்பு ஒப்பந்தம் மாநிலப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் இறுதியாக ஏலமெடுத்த ஒப்பந்ததாரருக்கும் இடையே கையெழுத்திடப்படும்.
  • கலப்பு மற்றும் மின்சார வாகனங்களின் துரித உற்பத்தி மற்றும் ஏற்பு – II (Faster Adoption and Manufacturing of Hybrid and Electric Vehicles II – FAME II) என்ற திட்டமானது மாநிலப் போக்குவரத்துக் கழகத்திற்கும் இறுதியாக ஏலமெடுத்த ஒப்பந்ததாரருக்கும் இடையே ஒரு மொத்த மதிப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட  வேண்டுமென கூறுகின்றது.
  • சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் உள்பட தமிழ்நாடானது எட்டு மாநிலப் போக்குவரத்துக் கழகங்களைக் கொண்டிருக்கின்றது.
  • மின்சாரப் பேருந்துகளுக்கான இயக்கச் செலவு டீசல் பேருந்துகளை விட மிக குறைவான ஒன்றாக இருக்கின்றது. ஆற்றல் நுகர்வுச் செலவு டீசல் பேருந்துகளுக்கு கிலோ மீட்டருக்கு 25 ரூபாய் என்றும் மின்சாரப் பேருந்துகளுக்கு கிலோ மீட்டருக்கு 7 ரூபாய் என்றும் இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்