பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர் நீதிமன்றமானது, ஹரியானா மாநில மக்களுக்குத் தனியார் வேலைவாய்ப்புகளில் 75% இடஒதுக்கீடு வழங்குவதற்காக 2020 ஆம் ஆண்டில் ஹரியானா அரசு இயற்றிய சட்டத்தினை ரத்து செய்தது.
ஒரு நபர் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதற்காக ஒரு அரசு அவர்களிடம் பாகுபாடு காட்ட முடியாது.
2020 ஆம் ஆண்டு ஹரியானா மாநில உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்பு சட்டம் ஆனது அரசியலமைப்பின் மூன்றாவது பகுதியை மீறுவதாக உள்ளது.
இந்தச் சட்டமானது, அம்மாநிலத்தில் 30,000 (முன்னதாக 50,000 ரூபாய்) ரூபாய்க்கும் குறைவான மாதச் சம்பளத்தை வழங்கும் தனியார் துறையில் சுமார் 75% வேலை வாய்ப்புகளை ஹரியானா மாநிலத்தவர்களுக்கென ஒதுக்கியுள்ளது.