TNPSC Thervupettagam

தனியார் துறையில் மகப்பேறு காலப் பலன்கள் - கேரளா

October 18 , 2019 1740 days 586 0
  • மகப்பேறு காலப் பலன்கள் என்ற சட்டத்தின் வரம்பிற்குள் தனியார் பள்ளிகளையும் கல்லூரிகளையும் கொண்டுவந்த முதல் மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளது.
  • அரசிடமிருந்து நிதியுதவி பெறும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் உட்பட தனியார் கல்வித் துறையில் உள்ள பணியாளர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான மாநில அமைச்சரவையின் முடிவுக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த சட்டம் பற்றி
  • இது மகப்பேறு காலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பை வழங்குகின்றது.
  • இது பெண்களுக்கு மகப்பேறு நலனுக்கான உதவியை அளிக்கின்றது - குழந்தையை கவனித்துக் கொள்ளும்போது ஊதிய இழப்பு இல்லாமல் விடுப்பு எடுத்துக் கொள்வது.
  • 1961 ஆம் ஆண்டின் அசல் சட்டமானது பெண்களுக்கு 12 வாரங்கள் ஊதியத்துடன் விடுப்பு அளிக்கின்றது.
  • 2017 ஆம் ஆண்டில் அச்சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தமானது அதை 26 வாரங்களுக்கு நீட்டித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்