கொரோனா வைரஸ் பரிசோதனையை தனியார் துறை நிறுவனங்களும் மேற்கொள்ள இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தச் சோதனையின் கட்டணம் ரூ. 9,000 முதல் ரூ. 12,000 வரை இருக்கும்.
தனியார் துறையால் செயல்படுத்தப்படும் மையங்களைத் தவிர இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றமானது (Indian Council of Medical Research - ICMR) 51 சோதனை மையங்களை நிறுவ இருக்கின்றது.
இந்த மையங்களானது சோதனை மற்றும் அளவீட்டு ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தினால் (National Accreditation Board for Testing and Calibration Laboratories - NABL) அங்கீகரிக்கப்பட இருக்கின்றது.