TNPSC Thervupettagam

தனியார் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் இரண்டாவது ஏவுகலம்

March 22 , 2024 247 days 343 0
  • தமிழ்நாடு மாநிலத்தில், விண்வெளி நுட்பம் சார் புத்தொழில் நிறுவனங்களில் ஒன்று தனது முதல் ஏவுகலத்தினை விண்ணில் செலுத்தி வரலாறு படைக்கவுள்ளது.
  • சென்னையில் அமைந்துள்ள விண்வெளி நுட்பம் சார் புத்தொழில் நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ் பிரைவேட் லிமிடெட் அக்னிபான் சார் நிலை சுற்றுப்பாதை தொழில்நுட்ப சோதனை (SOrTeD) தனது முதல் ஏவுகலத்தினை விண்ணில் ஏவ உள்ளது.
  • அக்னிபான், தனியார் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படவுள்ள இந்தியாவின் முதல் ஏவுதல் ஆகும்.
  • இது இந்தியாவின் முதல் பகுதியளவு கிரையோஜெனிக் எந்திரம் மூலம் இயங்கும் ஏவுகல ஏவுதல் செயல்பாடு ஆகும்.
  • மேலும், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட உலகின் முதல் முப்பரிமாண முறையில் முழுமையாக அச்சிடப்பட்ட என்ஜின் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்