வங்கக் கடலில் ஒடிஸா கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படை கப்பலிலிருந்து, அணு ஆயுதங்களை சுமந்து செல்லக் கூடிய, 350 கி.மீட்டர் இலக்கு வரம்புடைய கண்டங்களுக்கிடையேயான தனுஷ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் அனைத்து அணு ஆயுதங்கள் மற்றும் அவற்றோடு தொடர்புடைய விநியோகிப்பு அமைப்புகளை கட்டுப்படுத்துகின்ற இந்திய கடற்படையின் பாதுகாப்பு படைப்பிரிவு (Strategic Force Command -SFC) இந்த சோதனையை நடத்தியுள்ளது.
தனுஷ் ஏவுகணையானது பிரித்வி-III ஏவுகணை எனவும் அழைக்கப்படுகின்றது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குறு தூர, கண்டங்களுக்கிடையேயான (SRBM-Short Range Ballistic Missile) பிரித்வி-II ஏவுகணையின் கடற்படைக்கான மாறுபாட்டு வடிவமைப்பே (Naval Variant) தனுஷ் ஏவுகணையாகும் .
வழக்கமான ஆயுதங்கள் (Conventional weapons) மற்றும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய தனுஷ் ஏவுகணையானது ஓர் குறு தூர, கண்டங்களுக்கிடையேயான ஏவுகணையாகும்.
ஒருங்கிணைந்த வழிகாட்டு ஏவுகணை தயாரிப்புத் திட்டத்தின் (Integrated Guided Missile Development Programme -IGMDP) ஒரு பகுதியாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தினால் (DRDO – Defence Research and Development Organisation) தயாரிக்கப்பட்டு வரும் 5 ஏவுகணைகளுள் தனுஷ் ஏவுகணையும் ஒன்றாகும்.
IGMDP கீழ் தயாரிக்கப்பட்டுள்ள பிற ஏவுகணை வரிசைகளாவன.