இந்தியாவின் முதல் உள்நாட்டு, நீண்ட இலக்கு வரம்புடைய பீரங்கித் துப்பாக்கியான (Artillery Gun) “தனுஷ்” பொக்ரானில் தன்னுடைய இறுதி சோதனையை முழுமைப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்திய இராணுவத்தில் இதனுடைய இணைப்பிற்கு வழியுண்டாகியுள்ளது.
தனுஷ் ஆனது 155 mm x 45 mm திறனுடைய பீரங்கித் துப்பாக்கியாகும். இது “Desi Bofors” என்றும் அழைக்கப்படுகின்றது.
இத்துப்பாக்கி 38 கிலோமீட்டர் வரை சுடுதல் வரம்பினைக் கொண்டுள்ளது.
இதனுடைய 81 சதவீத பாகங்கள் உள்நாட்டு மூலாதாரத்தினைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை ஆகும்.
இந்தப் பீரங்கித் துப்பாக்கியானது 1980-களில் கையெழுத்திடப்பட்ட போபர்ஸ் துப்பாக்கி ஒப்பந்தத்தின் (Bofors gun deal) கீழ் தொழிற்நுட்ப மாற்றத்தின் (Transfer of Technology-ToT) முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவிற்கு வழங்கப்பட்ட ஆவணத்தின் அடிப்படையில் கொல்கத்தாவில் உள்ள இராணுவத் தளவாட தொழிற்சாலை ஆணையத்தினால் (Ordnance Factory Board -OFB) மேம்படுத்தப்பட்டதாகும்.