முக்கியமான முதலீட்டு நிறுவனங்களுக்கு (core investment companies - CICs) பொருந்தக் கூடிய ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள் மற்றும் மேற்பார்வைக் கட்டமைப்பை மறுஆய்வு செய்ய இந்திய ரிசர்வ் வங்கி தபன் ரே தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது.
சமீபத்தில் இந்த குழுவானது தனது பரிந்துரைகளை ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்துள்ளது.
தற்போது, பெருநிறுவன நிர்வாக வழிகாட்டுதல்கள் CICsகளுக்கு வெளிப்படையாகப் பொருந்தாது.
CIC
முக்கியமான முதலீட்டு நிறுவனங்கள் என்பவை வங்கிசாரா நிதியியல் நிறுவனங்களாகும் (NBFC - non-banking financial companies).
இது பங்குகள் மற்றும் பத்திரங்களை கையகப்படுத்தும் வணிகத்தை மேற்கொள்கின்றது.