தபஸ் 201 ஆளில்லா வான்வழி வாகனமானது, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் இந்தியக் கடற்படை ஆகியவை ஆளில்லா வான்வழி வாகனத்தின் இயக்க மற்றும் கட்டுப்பாட்டு திறன்களை தொலைதூரத்தில் அமைந்த ஒரு நிலக் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து INS சுபத்ரா கப்பலுக்கு மாற்றுவதை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளன.
இந்த ஆளில்லா வான்வழி வாகனம் (UAV) என்பது சுமார் 20,000 அடி (ASML) உயரத்தில் தடையின்றிப் பறக்கும் திறன் கொண்டதாகும்.
தபாஸ் 201 நடுத்தர உயர வரம்புடைய நீண்ட நேரம் இயங்கும் திறன் (MALE) கொண்ட இந்த ஆளில்லா வான்வழி வாகனம் உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்டது.
உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணி ஆகிய பலவேறு பணிகளை மேற் கொள்வதற்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.
இது இஸ்ரேலிய ஹெரான் ஆளில்லா வான்வழி வாகனத்தின் அதே ரகத்துடன் ஒப்பிடத் தக்கது ஆகும்.