தமிழக அரசின் எண்ணெய் கசிவு எதிர் நடவடிக்கைத் திட்டம் 2024
October 23 , 2024 38 days 160 0
தமிழக அரசானது, இத்தகைய பேரிடர்களைத் தணிப்பதற்காக வேண்டி ஓர் எதிர் நடவடிக்கைத் திட்டத்தினை இறுதி செய்துள்ளது.
நான்கு கடலோர மாவட்டங்கள் ஆனது எண்ணெய் கசிவு நிகழ்வினால் 'மிக அதிக அளவில்' பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மீதான எந்தவிதமான பெரும் பாதகமான தாக்கங்களையும் ஏற்படுத்தாமல், எண்ணெய்க் கசிவினால் மாசுபட்ட வாழ்விடத்தை அல்லது கரையோரப் பகுதிகளை அதன் முந்தைய நிலைக்கு என்று மீட்டு கொண்டு வருவதற்குத் தேவையானப் படிநிலைகள் மற்றும் நடைமுறைகளை இந்தத் திட்டம் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
இது மாநிலத்தின் கடற்கரையிலிருந்து 12 கடல் மைல்கள் (24 கிலோ மீட்டர்) தொலைவு வரையிலான கடல் பரப்பில் ஏற்படும் எந்த வகையான கடல் எண்ணெய்ப் பெரும் கசிவுகளுக்குமான எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வடிவமைக்கப் பட்டு உள்ளது.
இது 40 கிலோ மீட்டர் நிலப்பரப்பு அல்லது அலை ஓதத்தின் தாக்கங்கள் காணப்படக் கூடிய இடம், இவற்றுள் எது அதிகமான தூரமோ அது வரை நீண்டு அமைந்திருக்கும் நதி நீர் அமைப்புகளையும் உள்ளடக்கியது.
இதன்படியாக, மன்னார் வளைகுடா, எண்ணூர் மற்றும் பிச்சாவரம் சதுப்புநிலங்கள் உள்ளிட்ட கடலோரச் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.