TNPSC Thervupettagam

தமிழக அரசின் மலேரியா ஒழிப்பு உத்திகள்

April 16 , 2025 3 days 29 0
  • தமிழ்நாட்டில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, சுமார் 340 என்ற மலேரியாப் பாதிப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
  • தமிழ்நாடு மாநிலத்தில் பொதுவாக வைவாக்ஸ் மற்றும் ஃபால்சிபாரம் எனும் இரண்டு வகையான மலேரியப் பாதிப்புகளே பதிவாகியுள்ளன.
  • 2001 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் பதிவான மலேரியாப் பாதிப்புகள் 2.09 மில்லியனிலிருந்து 0.19 மில்லியனாகக் குறைந்துள்ளன.
  • அதே காலக் கட்டத்தில் பதிவான மிக ஆபத்தானதாக கருதப்படுகிற பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரம் பாதிப்புகள் 1.0 மில்லியனிலிருந்து 0.12 மில்லியன் என்ற அளவிலானப் பாதிப்புகளாகக் குறைந்துள்ளன.
  • SPR (ஆய்வகத்தில் உறுதி செய்யப்பட்ட மலேரியா பாதிப்பு விகிதம்) 2.31 மில்லியனில் இருந்து 0.19 ஆகக் குறைந்துள்ளது.
  • SFR (ஃபால்சிபாரம் பாக்டீரியா பாதிப்பு விகிதம்) 2001 ஆம் ஆண்டில் 1.11 மில்லியனில் இருந்து 2020 ஆம் ஆண்டில் 0.12 மில்லியனாகக் குறைந்துள்ளது.
  • சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, மிசோரம், ஒடிசா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து மிக அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்