2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், மாநிலச் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் எதுவும் அளிக்காமல் இருந்தால், அது "அம்மசோதா காலாவதியாகி விட்டது" என்று பொருள் என ஆளுநர் அறிவித்தார்.
தனது ஒப்புதலை நிறுத்தி வைப்பதை “அம்மசோதாவானது செயல்பாட்டிற்கு வராதது” என்பது அது காலாவதியாகி விட்டது என்பதைக் குறிக்கிறது என்று உச்ச நீதிமன்றம் மிக நன்கு வரையறுத்துள்ளது என்று அவர் வாதிட்டார்.
ஆனால், 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், பஞ்சாப் மாநில ஆளுநரின் வழக்கைக் கையாளும் போது உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஆனது, ஓர் ஆளுநர் ஒரு மசோதாவை நிராகரிப்பது அதன் செயல் இழப்பைக் குறிக்காது என்று கூறியது.
ஒரு மாநிலச் சட்டமன்றத்தினால் முன்மொழியப்பட்ட ஒரு சட்டம் ஆனது, ஆளுநர் தனது ஒப்புதலில் கையெழுத்திட மறுப்பதால் மட்டும் செயலிழந்து விடாது.
2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில இளங்கலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை அனுமதி மசோதாவினை சட்டமன்றச் சபாநாயகரிடம் ஆளுநர் ரவி திருப்பி அனுப்பினார்.
MBBS/BDS படிப்புகளுக்கு NEET தேர்வு அடிப்படையிலான சேர்க்கையிலிருந்து விலக்கு அளிக்கவும், அதற்குப் பதிலாக 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்களைச் சேர்க்கவும் மசோதா கோரியது.
நீதிபதி A.K. ராஜன் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த மசோதாவானது உருவாக்கப் பட்டது.
தமிழக சட்ட சபை, முதல் முறையாக, ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாவை மீண்டும் ஏற்றுக் கொண்டு, அதை மீண்டும் ராஜ்பவனுக்கு அனுப்பியது.
இந்த முறை, ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்து விட்டார் என்ற நிலைமையில் அதை அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்.
2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், பணமோசடி மீதான ஒரு வழக்கில் அமலாக்க இயக்குநகரத்தினால் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஆளுநர் அவர்கள் V. செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அவரைப் பதவியில் இருந்து நீக்கினார்.
ஆனால், முதல்வர் திரு.செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத ஒரு அமைச்சராகப் பதவியில் தக்க வைத்துக் கொண்டார்.
பின்னர் அதே நாளில், ஆளுநர் தனது முடிவில் இருந்து உடனடியாகப் பின்வாங்கினார்.
2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றம் விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்திருந்த போதிலும், K. பொன்முடியை மீண்டும் மாநில அமைச்சரவையில் சேர்க்க ஆளுநர் மறுத்துவிட்டார்.
பின்னர் இந்தியத் தலைமை நீதிபதி, மீண்டும் அவரை அமைச்சர் பதவியில் இணைக்க மறுத்ததன் காரணமாக, "இந்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினை மீறியதற்காக" என்று ஆளுநரைக் கடுமையாக சாடினார்.
பின்னர் திரு.பொன்முடிக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் மற்றும் இரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார்.
2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், சென்னை ஆளுநர் மாளிகையின் பிரதான வாயிலில் ஒருவர் மொலோடோவ் மதுபானக் கலவைக் குடுவையை வீசினார்.
ஒரு நாள் கழித்து, ஆளுநர் மாளிகையானது, காவல்துறை அந்தத் தாக்குதலை வெறும் "வன்முறை நடவடிக்கை" எனக் கூறி தட்டிக் கழித்ததாக குற்றம் சாட்டியது.
அதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் மீதான விசாரணையை மேற்கொண்ட தேசியப் புலனாய்வு முகமை ஆனது, இந்தத் தாக்குதலில் பலருக்குப் பங்குள்ளது அல்லது மிகத் தீவிரமான தாக்குதலில் ஈடுபட்டனர் என்ற ஆளுநரின் கூற்றை நிராகரித்தது.