TNPSC Thervupettagam

தமிழக ஆளுநர் குறித்து உச்ச நீதிமன்ற கருத்து

November 24 , 2023 367 days 301 0
  • மாநில சட்டப் பேரவையால் “மீண்டும் நிறைவேற்றப்பட்ட” 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் வைத்திருக்க அரசியலமைப்புச் சட்டம் ஆளுநருக்கு “உரிமை” வழங்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • இந்த மசோதாக்கள் இரண்டாம் முறையாக நிறைவேற்றப்பட்டவுடன், அவை பண மசோதாக்களுக்கு இணையாக கருதப்படும்.
  • 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டத்தில் இந்த மசோதாக்கள் ஆளுநர் அலுவலகத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பப் பட்டன.
  • ஆளுநரிடம் ஒப்புதலுக்காக 182 மசோதாக்கள் மாநிலச் சட்டசபையினால் அனுப்பப் பட்டன.
  • இதில் 152 மசோதாக்களுக்கு ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து மசோதாக்கள் அரசாங்கத்தால் திரும்பப் பெறப்பட்டதோடு ஒன்பது மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநரால் அனுப்பப்பட்டுள்ளன.
  • ஒப்புதலுக்காக முன்வைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கான தனது ஒப்புதலை ஆளுநர் நிறுத்தி வைத்துள்ள நிலையில் ஐந்து மசோதாக்களுக்கு 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்