TNPSC Thervupettagam

தமிழக உள்ளாட்சித் தேர்தல்

September 16 , 2021 1073 days 475 0
  • மாநிலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் கிராம உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவதற்கான தேதிகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வி. பழனிகுமார் அறிவித்தார்.
  • காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி  ஆகிய மாவட்டங்களில் தேர்தல்கள் நடத்தப்படும்.
  • அக்டோபர் 06 மற்றும் அக்டோபர் 09 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப் பட்டு அக்டோபர் 12 ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை  நடைபெறும்.
  • மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றிற்கான தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் போன்ற பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல்கள் அக்டோபர் 22 அன்று நடைபெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்