மாநிலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் கிராம உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவதற்கான தேதிகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வி. பழனிகுமார் அறிவித்தார்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் தேர்தல்கள் நடத்தப்படும்.
அக்டோபர் 06 மற்றும் அக்டோபர் 09 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப் பட்டு அக்டோபர் 12 ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றிற்கான தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் போன்ற பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல்கள் அக்டோபர் 22 அன்று நடைபெறும்.