தமிழக சட்டசபையின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரானது ஆகஸ்ட் 13 அன்று தொடங்கியது.
பின்னர் செப்டம்பர் 13 அன்று சபாநாயகர் அப்பாவு அவர்களால் தேதி குறிப்பிடாமல் அவை ஒத்தி வைக்கப் பட்டது.
சுதந்திரத்திற்குப் பிறகு மாநிலச் சட்டமன்றத்தில் ஆங்கிலோ – இந்திய சமூகத்தைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் நியமிக்கப்படாதது இதுவே முதல்முறையாகும்.
2019 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட 104வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் மக்களவையிலும் நாட்டின் அனைத்துச் சட்டமன்றங்களிலும் ஆங்கிலோ இந்தியர் கொண்டிருந்த பிரதிநிதித்துவத்தினை ரத்து செய்தது.