தமிழக ஆளுநர் அவர்கள் 2024 ஆம் ஆண்டிற்கான தொடக்க உரையை நிகழ்த்தினார்.
மேலும் அவர் தனக்கான உரையை முழுவதுமாகப் படிக்க மறுத்ததற்கான காரணங்களைக் கூறி தனது உரையையும் கருத்துக்களையும் சுருக்கி கூறினார்.
ஆனால் தமிழ்நாடு சட்டசபை ஆனது, சுருக்கப்பட்ட உரைக்குப் பதிலாக மாநில அரசு தயாரித்த முழு உரையை மட்டுமே ஆவணப்படுத்துவதற்கான ஒரு தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றியது.
பேரவையின் 17வது விதியைத் தளர்த்துவதற்காக இந்த தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
அரசமைப்புச் சட்டத்தின் 175வது அல்லது 176வது சட்டப் பிரிவின் கீழ் ஆளுநர் உரையாற்றும் போது அவையின் உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் பற்றி இது கூறுகிறது.