செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள சட்டப்பேரவையின் நூற்றாண்டு நிறைவு விழாக் கொண்டாட்டத்தினைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தொடங்கி வைத்தார்.
மேலும் 5 முறை முதலமைச்சராகப் பணியாற்றிய திரு. மு. கருணாநிதி அவர்களின் உருவப் படத்தையும் திரு. கோவிந்த் அவர்கள் திறந்து வைத்தார்.
கடந்த 40 ஆண்டுகளில் மாநிலத்தின் ஒரு முக்கிய நபரின் உருவப் படமானது குடியரசுத் தலைவரால் திறந்து வைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அப்போதைய குடியரசுத் தலைவர் N. சஞ்சீவ் ரெட்டி அவர்கள் முன்னாள் முதல்வர் K. காமராஜர் அவர்களுடைய உருவப் படத்தைத் திறந்து வைத்தார்.