TNPSC Thervupettagam

தமிழக நிதிநிலை அறிக்கை – சிறப்பம்சங்கள்

March 20 , 2022 856 days 567 0
  • தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 2022 – 23 ஆம் ஆண்டிற்கான பொது நிதிநிலை அறிக்கையினை 2022 ஆம் ஆண்டு மார்ச் 18 அன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
  • இது தி.மு.க அரசின் 2வது நிதிநிலை அறிக்கையாகும்.
  • இது மின்னணு முறையில் தாக்கல் செய்யப்பட்டது.
  • பருவநிலை மாற்றம் மற்றும் பசுமை முன்னெடுப்புகளுக்காக ஒரு தனி அமைப்பானது நிறுவப்படும்.
  • தமிழகத்தின் மாநில விலங்கினைப் பாதுகாத்து வளங்காப்பதற்காக வேண்டி நீலகிரி வரையாடு திட்டத்தினை அரசு அறிவித்துள்ளது.
  • தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பயின்ற அனைத்துப் பெண் மாணவிகளுக்கும் இளங்கலைப் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு மற்றும் தொழில்துறைக் கல்விப் படிப்புகளைத் தடையின்றி முடிக்கும் வரை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக மாதம் ரூ.1000 செலுத்தப்படும்.
  • புலம்பெயர் தொழிலாளர்களுக்காக நடமாடும் தகவல் வழங்கீட்டு மையங்களானது தொடங்கப் படும்.
  • அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்குவதற்காக வேண்டி பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டமானது தொடங்கப்படும்.
  • அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு மாநிலப் புத்தாக்க நிறுவன மையமானது சென்னையின் நுங்கம்பாக்கத்தில் தமிழ்நாடுத் தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தினால் நிறுவப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்