TNPSC Thervupettagam

தமிழக மாணவர்களின் நானோ செயற்கைக்கோள்

October 19 , 2020 1409 days 592 0
  • தமிழ்நாட்டின் கருர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்களால் உருவாக்கப் பட்ட இந்தியா சாட் (India Sat) என்ற சோதனை செயற்கைக்கோளானது நாசாவால் ஏவப்பட உள்ளது.
  • இது ஜூன் மாதத்தில் துணை சுற்றுப்பாதையில் அதன் ஆராய்ச்சி ஏவுகலன் 7 (sounding rocket 7) மூலம் விண்ணில் செலுத்தப் படும்.
  • அந்த மூன்று மாணவர்கள் தாந்தோன்றிமலையைச் சேர்ந்த  எம். அட்னான், நாகம்பள்ளியைச் சேர்ந்த எம். கேசவன் மற்றும் தென்னிலையைச் சேர்ந்த வி.அருண் ஆகியோர் ஆவர்.
  • கியூப்ஸ் இன் ஸ்பேஸ் (Cubes in Space) திட்டத்தால் நடத்தப்பட்ட உலகளாவிய போட்டியின் ஒரு பகுதியாக வடிவமைக்கப்பட்ட பல செயற்கைக்கோள்களை இந்தச் செயற்கைக்கோள் மாதிரியானது  விஞ்சியுள்ளது.
  • இது உலகின் மிகச்சிறிய மற்றும் இலகுவான செயற்கைக்கோள் எனக் கருதப் படுகிறது, இது வலுவூட்டப்பட்ட கிராபீன் பாலிமர் (reinforced graphene polymer) மூலம் 3 செ.மீ அளவு மற்றும் 64 கிராம் எடையைக் கொண்டுள்ளதாகும்.
  • இது சூரிய சக்தி ஆற்றலால் இயங்கும். மேலும் இது 13 உணர்விகள் பொருத்தப் பட்டு இருபதுக்கும் மேற்பட்ட அளவுருக்களை (parameters) கணக்கிட பயன்படுகிறது.
  • ஈர்ப்பு விசை, காந்த சக்தி, அண்டக் கதிர்வீச்சு ஆகியவை இதைப் பயன்படுத்தி அளவிடப்பட வேண்டிய அறிவியல் அளவுருக்கள் ஆகும்.
  • பூமியிலிருந்து விண்வெளிக்கு சமிக்ஞைகளை அனுப்பவும் பெறவும் இந்த செயற்கைக் கோளிடம் வானொலி அதிர்வெண் தொடர்பு (Radio frequency communication) உள்ளது என்று கூறப்படுகிறது.

 

 

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்